Sunday, 17 December 2017

அஜித் ரசிகர்களின் செயலுக்கு குவியும் பாராட்டுக்கள்





அஜித் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை வைத்திருக்கும் நடிகர். இவர் படங்களுக்கு வரும் ஓப்பனிங் பற்றி நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.
இந்நிலையில் அஜித் ரசிகர்கள் தமிழகம் தாண்டி மலேசியாவிலும் நிறைய பேர் உள்ளனர். மலேசியாவில் உள்ள அஜித் ரசிகர்கள் கஷ்டப்படும் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்று வருகின்றனர்.
அதற்காக ஒரு தொண்டு நிறுவனமும் தொடங்கியுள்ளனர், இதுக்குறித்து நாம் நேற்று கூறியிருந்தோம், ஏற்கனவே இதை ஸ்டண்ட் மாஸ்ட்டர் தீனா, ப்ரேம்ஜி பாராட்டியிருந்தனர்.
தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் மலேசியா பாடகர்கள் என பல பிரபலங்கள் இதற்கு தங்கள் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment