லட்சுமி ராமகிருஷ்ணன் நடிகை, இயக்குனர் என பல துறைகளில் கலக்கி வருபவர். இவர் பிரபல தொலைக்காட்சியில் சொல்வதெல்லாம் உண்மை என்று ஒரு ஷோவை நடத்தி வருகின்றார்.
இதில் இவர் தொகுப்பாளராக இருக்க, பல குடும்பங்களில் நடக்கும் பிரச்சனைகளை விவாதமாக எடுத்து பேசுவார்.
இந்த நிகழ்ச்சி 1500 எபிசோட் கடந்து சென்று கொண்டிருக்க, சமீபத்தில் வந்த அருவி படம் இந்நிகழ்ச்சியின் மறுப்பக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
இந்த நிகழ்ச்சி அனைத்தும் ட்ராமா தான், இதில் வரும் மக்களை வேண்டுமென்றே அழ வைக்கின்றனர், இதில் லட்சுமி ராமகிருஷ்ணன் பேசுவது எல்லாம் இயக்குனர் சொல்லி கொடுப்பது தான் என்பது போல் அப்படத்தில் காட்டியிருக்கிறார்கள்.
என்ன அந்த படத்தில் இந்த நிகழ்ச்சியில் பெயர் சொல்வதெல்லாம் சத்தியம், இந்த காட்சிகளுக்கு திரையரங்கிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment